சிற்பத்துறை

நோக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத்துறை 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. தொடக்க நாள் முதல் இந்தியக்கலையில் தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக் களங்களில் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் பரந்து பட்ட ஆய்வுப் பணிகளைக் குடவரைக் கலை தொடங்கி விசய நகரக்கலை வரையிலான கலைக் கூறுகளின் நுண்மாண் நுழைபுலங்களை வெளிக்கொணர்ந்து உள்ளது. தமிழகக் கலை மற்றும் இந்தியக் கலைக் கூறுகளில் பக்தி இலக்கியங்கள் ஏற்படுத்திய அதிக அளவிலான தாக்கங்களைப்பற்றி இத்துறை ஆய்வு மேற்கொண்டு செய்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் சிறப்புப் பெற்ற இந்திய மற்றும் பன்னாட்டு ஆய்வு இதழ்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இத்துறையின் ஆய்வுப் பணிகள் நூல்களாக வந்தவண்ணம் உள்ளன. முனைவர் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகிய ஆய்வுப் பட்டங்களையும் வரலாறு, கலை மற்றும் பண்பாடு என்ற பொருண்மையைக் கொண்ட முதுகலைப் பட்டத்தையும் இத்துறை வழங்குகிறது. இதில் கலை, வரலாறு, அழகியல், படிமக்கலை போன்ற சிறப்புப் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத் திட்டம்

  • இந்தியக் கலையின் பன்முகக் கோட்பாடுகளை வெளிக்கொணர்தல் சிற்பங்களின் வரலாறு, புராணம் மற்றும் தத்துவப் பின்னணிகளின் அடிப்படையில் இனம் கண்டு ஆய்வுப் படைப்புகளை வெளிக்கொணர்தல்.
  • இந்திய ஒருமித்த கலையில் மண்டலக் கலைக்கோட்பாடுகளை ஆய்வு செய்தல்.
  • புகைப்படம் ஆவணக் காப்பகம் ஏற்படுத்துதல்.
  • பன்னாட்டு அறிஞர்களுடன் ஆய்வுத் தொடர்புகளை ஏற்படுத்தி கூட்டாய்வு மேற்கொள்ளுதல், கருத்தரங்குகள் நடத்துதல்.
  • படிமக்கலை ஆய்வியல் சிற்ப சாத்திரங்கள் மற்றும் ஆகமங்களின் அடிப்படையில் படிம அறவீட்டு முறைகளை ஒப்பாய்வு செய்தல்.
  • ஆய்வுத்திட்டங்களை நூலாக வெளிக்கொணர்வது போன்று, துறையின் முனைவர் பட்ட ஆய்வுகளையும் நூலாக வெளிக்கொணர்தல்.

ஆசிரியர்கள்

Dr.sheela
முனைவர் பா.ஷீலா
பேராசிரியர்


Dr latha

செய்திகளும் நிகழ்வுகளும்