கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

நோக்கம்

தென்னிந்தியப் பண்பாட்டினைத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்தல். தமிழ்நாட்டு வரலாற்றுக்கு உறுதுணையாகவுள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள் தொல்பொருட்கள் ஆகியவற்றைச் சேகரித்தல், ஆவணப்படுத்துதல் பாதுகாத்தல், பகுப்பாய்வு செய்தல், பதிப்பித்து அவற்றை வெளியிடுதல், தமிழ்நாட்டு வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் தொல்லியல் சார் இடங்களைக் கண்டறிந்து அகழாய்வு செய்தல்.

தமிழக வரலாற்றின் அரசியல், சமூக, பொருளாதார நிலையினை முதன்மைச் சான்றுகளான தொல்பொருட்கள், கல்வெட்டுகள் கொண்டு அதன் தொன்மையை வெளிக்கொணர்தல்.

ஆற்றிய பணிகள்

வல்லம் (1984), கொடுமணல் (1885,1886), பெரியபட்டினம் (1987), மயிலாடும்பாறை (2003), தாண்டிக்குடி(2004) ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் கொடுமணலே மிகப்பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வாகும். இதில் கிடைத்த தொல்பொருட்கள் உலக அளவில் பெரிதும் பேசப்பட்டன. பெரியப்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வின் மூலம் அவ்வூர் இடைக்காலத்தில் சிறந்த துறைமுகமாக, சீன நாட்டுடன் தொடர்பு கொண்டு விளங்கியமை வெளிக்கொணரப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட தொல்லியல் வாழ்விடங்கள் களப்பணிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.17ஆய்வுத் திட்டங்கள் பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் நேரு அறக்கட்டளை ஆகியவற்றின் நல்கை உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பன்னாட்டளவில் 3 திட்டங்கள் முடித்தளிக்கப்பட்டுள்ளன.

பன்னாட்டளவில் புகழ் பெற்று விளங்கும் டோக்கியோ பல்கலைக்கழகம் காகுஷியின் (ஜப்பான்), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் (இங்கிலாந்து), மெய்சான் டெஸ் சைன்சஸ் (Maison des sciences)பிரான்சு பரதேனியர் பல்கலைக்கழகம், ஜாஃப்னா பல்கலைக்கழகம் (இங்கிலாந்து) போன்ற பல்கலைக்கழகங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளை இத்துறைக் கல்வியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

தமிழகத் தொல்லியல் கழகம் என்ற ஆய்வுக்கழகத்தை அமைத்து கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆவணம் என்ற ஆய்விதழை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மற்றும் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் நல்கை உதவியுடன் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் நில வரைப்பட ஏட்டினைப் பல அரிய தொல்லியல் மற்றும் வரலாற்று விவரங்களுடன் வெளிக்கொணர தமிழ்ப் பல்கலைக்கழகமும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனமும் சேர்ந்து பெருந்திட்டம் வாயிலாகச் செயல்படுத்தி, அதன் முன்னோட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குத் தற்பொழுது ஃபோர்டு அறக்கட்டளை பெரும் நிதியுதவியை வழங்கியுள்ளது.

10,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுத்தரவுகள் கணிப்பொறியில் இடுவரல் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்துள்ள கள ஆய்வுப் பணிகள்

தர்மபுரி மாவட்டத் தொல்லியல் கள ஆய்வு, வட ஆற்காடு மாவட்டத் தொல்லியல் கள ஆய்வு, தென் ஆற்காடு மாவட்டத் தொல்லியல் கள ஆய்வு, புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் கள ஆய்வு.

சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

சேலம் மாவட்டக் கல்வெட்டுகள், மராட்டியக் கல்வெட்டுகள், சேதுபதி செப்பேடுகள், தொண்டைமான் செப்பேடுகள், கொங்கு நாட்டைச்சேர்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், திருச்சி மாவட்ட ஓலை ஆவணங்கள்.

  • வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
  • பன்னாட்டளவில் 10
  • தேசிய அளவில் 102
  • நடத்திய கருத்தரங்குகள்
  • தேசிய அளவில் 7
  • மாநில அளவில் 8
  • அயல்நாட்டிலிருந்து வந்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள்: ஃபுகாலோ ஜீனிச்சி, டொக்சியோ, பல்கலைக்கழகம், டோக்கியோ, பிபுஷ்பரட்ணம், ஜஃபனா பல்கலைக்கழகம், ஜஃப்னா, ஸ்ரீலங்கா, வடமகேஷ்வரன், பரதேணியா பல்கலைக்கழகம், பரதேனியா, ஸ்ரீலங்கா.
  • ஆய்வுமேற்பார்வைப் பணிகள்
  • பட்டம் பெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 9
  • பதிவு செய்துள்ள முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 20
  • பட்டம் பெற்ற ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் 22
  • பதிவு செய்துள்ள ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் 5
  • நடைபெற்றுவரும் வகுப்புகள்
  • முதுகலை பட்டப்படிப்பு (வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு)

ஆசிரியர்கள்

 

thulasendran
முனைவர் ஆ.துளசேந்திரன்
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

bhavani
முனைவர் மா. பவானி
இணைப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்