நாமதீப நிகண்டு

பதிப்பாசிரியர்: ச.வையாபுரிப்பிள்ளை
வெளியீட்டு எண்: 16, 1985, ISBN
கிரவுன் 1/8, பக்கம் 340, உரூ. 68.00, நிழற்பட மறுபதிப்பு
முழு காலிகோ

நிகண்டு நூலினை உரிச்சொற் பனுவல் என்பது தமிழ் வழக்கு. கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழில் பிற மொழிச் சொற்கள் பரவலாகக் கலந்து உறவாடத் தொடங்கின. இவற்றின் காரணமாகச் சொற் பொருளுணர்த்தும் நூல்கள் தோன்றின. இவ்வாறு பல நிகண்டுகள் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டன. காலத்தால் பிற்பட்ட நாமதீப நிகண்டு சுவடி வடிவிலேயே இருந்தது. கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு நூலினைத் தமிழ்-லெக்சிகன் பதிப்பாசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை அவர்கள் பழைய உரையைத் தழுவியியற்றிய புத்துரையுடன் 1930ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் அகராதியின் ஆதார நூற்தொகுதியில் முதல் நூலாக இந்நூல் வெளிவந்தது. பின்னர் இப்பதிப்பும் கிடைப்பது அரிதாயிற்று. இப்பொழுது நிழற்பட மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. நூல் முழுவதும் 800 வெண்பாக்களால் இயன்றுள்ளது. ஒருபொருட் பல்பெயர்த் தொகுதியாய் விளங்குகிறது. இந்நூலிற் கூறப்பட்டுள்ள பொருட் பெயர்கள் ஏறத்தாழப் பன்னீராயிரமாகும். இவை முழுவதும் சொல்லகராதியாகத் தொகுத்து இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்