தழைத்தோங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம்
இந்திய பண்பாட்டின், நாகரீகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்று தொட்டு இன்று வரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம், ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ் மொழி. தமிழ் மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றை சார்ந்த துறைகளுக்கு பொலிவும் வலிவும் ஊட்ட ஒரு பல்கலைக்கழகம் அமைவது இன்றியமையாததாகும் என்று அரசு கருதியது.
 
வெளியீடுகள்
தமிழ்ப் பல்கலைக்கழகம் உயராய்வு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் வாழ்வியல் சார்ந்த ஆய்வுகலை நூலாக எழுதி பல்கலைக்கழகத்திற்க்குச் சமர்பிக்கிறார்கள். இந்த நூல்கலை அச்சிட்டு உலக மக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் பதிப்புத்துறை செயல்படுகிறது.
 
நூலகம்
தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் 1981ஆம் ஆண்டு அரண்மனை கட்டடத்தில் நிறுவப்பெற்றது. பாராளுமன்ற கட்டட வடிவமைப்பைக் கொண்ட புதிய நூலகக் கட்டடம் 1987ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பெற்று நூலகம் இயங்கி வருகிறது. புதிய நூல்களையும், கால முறை இதழ்களையும் மட்டுமே வாங்கி வைப்பதோடு மட்டுமின்றி தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட பழைய அரிய நூல்களையும் காலமுறை இதழ்களையும் திரட்டி பாதுகாக்கும் பணியை இந்நூலகம் ஏற்றிருக்கிறது.
 
காட்சியகம்
தமிழகம் உலகப் பண்பாட்டின் தொட்டில் என்பர் வரலாற்று அறிஞர், இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையறாத நாகரிகத் தொன்மையைப் பெற்ற பெருமை தமிழ் மக்களைச் சாரும். தமிழரின் நாகரிகம் மற்றும் பண்பாட்டைப் போன்று அவர்தம் மொழியும் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்தகைய பழமையான பண்பாட்டையும் பெருமை பெற்ற பாரம்பரியத்தையும் வெளியுலகிற்குக் கா