சர்வதேச சக-மதிப்பீடு ஆய்வு இதழ்
தமிழ்க்கலை
Tamil Civilization

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் சர்வதேச அறிவியல் இதழ்

5+
மொத்த கட்டுரைகள்
கட்டுரைகள்
1
அனைத்து இதழ்கள்
இதழ்கள்
29+
மொத்த பதிவிறக்கங்கள்
பதிவிறக்கம்
40+
காட்சிகள்
காட்சிகள்
சமீபத்திய இதழ்
தற்போதைய இதழ்
தொகுதி 1, இதழ் 1 — சனவரி – மார்ச் 2026
அனைத்தும் காண →
தொகுதி 1 · இதழ் 1 பக்கங்கள் 0–10
வ.ஐ.சு எனும் ஆளுமையின் தமிழியல் வகிபாகம்
வ.ஐ.சு எனும் ஆளுமையின் தமிழியல் வகிபாகம்
முனைவர் தெ.வெற்றிச்செல்வன்
வ.ஐ.சு எனும் வடசேரி ஐயம்பெருமாள் சுப்ரமணியம் மொழியியலில் கற்றுத் துறைபோகியவர்; நிருவாக மேலாண்மையில் சிறந்து பொலிந்தவர்; திராவிட மொழியியல் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், திராவிடப் பல்கலைக்கழகம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், உலகத் தமிழாய்வுக் கழகம் ஆகியவை தொடங்கக் காரணமாக இருந்ததோடு, அவற்றின் செம்மாந்தச் செயல்பாட்டுக்கு உந்துசக்தியாக விளங்கியவர். அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹவுஸ் ஹோல்டரின் நெறியாள்கையில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர். நூற்றாண்டு கண்ட பன்முக ஆளுமையரான அவரது தமிழியல் வகிபாகம் குறித்து இங்கு சிந்திக்கப் படுகிறது.
ஒலிக்கணம் இலக்கணம் திராவிடர் ராஸ்மஸ் ராஸ்க்
தொகுதி 1 · இதழ் 1 பக்கங்கள் 11–21
தாவர தீர்வு முறையில் சுற்றுச்சூழல் மாசுநீக்கம்
தாவர தீர்வு முறையில் சுற்றுச்சூழல் மாசுநீக்கம்
முனைவர் கு.க. கவிதா
சுற்றுச்சூழல் என்பது நம்மை சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளின் ஒன்றை ஒன்று சார்ந்த அமைப்பே அகும். புவியின் சுற்றுச்சூழல் சமநிலையில் மாற்றம் மற்றும் உயிருள்ள, உயிரற்ற காரணிகளில் மாறுபாடு அதனால் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது. சுற்றுச்சூழல் இயற்கையாகவும், மனித செயல்பாடுகளால் பல்வேறு வகையில் பாதிப்பு அடைகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளில் மிக முக்கியமானது சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது இயற்கைக்கு புறம்பாக அல்லது தேவையில்லா இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றத்தினால் சுற்றுச்சூழல் அதாவது நீர், நிலம், காற்று மற்றும் உயிரினங்களாகிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு கேடு உண்டாவதையே சுற்றுச்சூழல் மாசுபாடு என்கிறோம் (Schnoor, 2002). சுற்றுச்சூழல் மாசுபாடுக்கான தீர்வுமுறைகள் பல வகைகள் உண்டு. அவை இயற்பியல், வேதியியல், உயிரியல் முறைகளில் நீர், நிலம், காற்றில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் காரணிகளை சரி செய்வதே ஆகும். அதில் மிகவும் எளிமையான மற்றும் இயற்கையான முறை என்பது உயிரியல் தீர்வு முறை (உயிரித்தீர்வு) ஆகும். உயிரித் தீர்வு என்பது உயிரினங்களால் தாவர, விலங்கு மற்றும் நுண்ணுயிர்களைக் கொண்டும் அவற்றின் விளைபொருட்கள், பகுதிகள், எச்சங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுக்களை அகற்ற, குறைக்க, விளைவுகளை கட்டுப்படுத்த தீர்வுகாணும் முறையே உயிரித்தீர்வு ஆகும். உயிரித் தீர்வு முறையில் உட்பிரிவாக தாவரங்கள், தாவரப் பொருட்கள் அதன் கழிவுகளைக் கொண்டு மாசுக்களை நீக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் முறையே தாவரத்தீர்வு முறையாகும்.
தொகுதி 1 · இதழ் 1 பக்கங்கள் 22–29
கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சபையார் சார் பதிவுகள்
கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சபையார் சார் பதிவுகள்
முனைவர் ந.மகாதேவி
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கியதாகக் கருதப்படும் கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சபையார்கள் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. ஆய்வு நோக்கம் சபையார்கள் அக்காலகட்டத்தில் பெற்றிருந்த அதிகாரம், பொறுப்பு, தனித்துவம் ஆகியவற்றைப் பற்றி ஆய்வதே, இவ்வாய்வின் நோக்கம். ஆய்வுப் பொருண்மை கொங்குநாட்டில் கிடைக்கக்கூடிய கல்வெட்டுகளில் சபையார்கள் பற்றிய குறிப்பே இவ்வாய்வின் பொருண்மை. ஆய்வு எல்லை கொங்குநாட்டில் கிடைக்கக்கூடிய கி.பி.10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.15 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே ஆய்வு எல்லையாக அமைகின்றன. கலைச்சொற்கள் வெஞ்சம் (பொறியல்), திருப்புதியது (படையல்), சுங்கம் (வரி). சபையார்கள் சபை என்பது ஒரு கூட்டம் அல்லது பேரவை எனப் பொருள் தருகிறது. கிராமத்தில் முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுக்க உருவாக்கப்பட்ட கூட்டமே சபை. அந்தச் சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களைச் ‘சபையார்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இது ‘சபா’ என்ற வடமொழிச் சொல்லின் தழுவல். சபை என்பதற்கு அவை, மன்றம் எனப் பல வகைகளில் பொருள்கொள்ளலாம்.
தொகுதி 1 · இதழ் 1 பக்கங்கள் 30–41
திருக்குறளில் மேலாண்மையியல்
திருக்குறளில் மேலாண்மையியல்
முனைவர் கோ.ப. நல்லசிவம்
மேலாண்மையியல் என்பது இன்று எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வரும் மிக முக்கியமான காரணியாக உள்ளது. தொடக்க காலத்தில் வணிகத்தில் மட்டும் வணிகவியல் மேலாண்மை என்று இருந்த இத்துறை, இன்று மருத்துவம், கல்வி, தொழில், கலை, பொறியியல், கணிப்பொறி, செயற்கை நுண்ணறிவு முதலிய அனைத்து நிலைகளிலும் பரந்து விரிந்துள்ளது. மேலாண்மையியல் அல்லது நிர்வாகவியல் என்னும் சொற்கள் புதிதாக இருந்தாலும் பொருண்மை தமிழுக்குப் புதிதல்ல. ஆதிகாலம் தொட்டு நில மேலாண்மை, நீர்மேலாண்மை, ஆட்சி, அதிகாரம், மக்கள் தொடர்புகள், வணிகம் முதலிய பல நிலைகளில் தமிழ்ச் சமுதாயத்தில் இக்கருத்தும் செயன்மையும் போற்றப்பெற்று நடைமுறையில் இருந்துள்ளன. இன்று நவீன மேலாண்மையியல் குறித்த மெய்யியலோடு திருக்குறளில் இடம் பெறும் மேலாண்மையியல் தொடர்பான பதிவிகளை ஆய்வு செய்வதும் ஒப்பிடுவதும் இவ் ஆய்வின் நோக்கமாகும்.
மேலாண்மையியல் திட்டமிடல் நிர்வாகம் ஒருங்கிணைத்தல்
தொகுதி 1 · இதழ் 1 பக்கங்கள் 42–54
படைப்புலகில் காப்புரிமை
படைப்புலகில் காப்புரிமை
முனைவர் சி.வேல்முருகன்
நவீன உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய தொழில் நுட்பங்களும், படைப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதில் தகவல் செயலாக்கமும், மீட்டெடுப்புகளும் 21 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படைப்புலகில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளும் அநேகமாக மின்னணுமயமாகிக் கொண்டிருக்கின்றன. உலகமயமாகிய இன்றைய பதிப்புலகில் படைக்கப்படும் அறிவுசார் சொத்துக்களுக்குக் காப்புரிமை என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே இக்கட்டுரையில் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்புலகம், நூலகம், மின் நூலகம், காப்புரிமைச் சட்டம், கருத்துக்களவு, போன்றவைகளைப் பற்றி விரிவாகக் காணலாம். எனவே, காப்புரிமைச் சட்டத்தின்படி நூல்களைப் பதிவு செய்து கொள்வது பாதுகாப்பானவையாக அமையும்.
✦ கட்டுரை அழைப்பு
உங்கள் ஆராய்ச்சியை வெளியிடுங்கள்
தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, கலை மற்றும் தொடர்புடைய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். இரட்டை குருட்டு சக-மதிப்பீடு, திறந்த அணுகல் வெளியீடு.
📅
காலக்கெடு
30 நாட்கள்
⏱️
மதிப்பீடு
7–28 நாட்கள்
🌐
திறந்த
அணுகல்
✍️ இப்போதே சமர்ப்பிக்க 📋 வழிகாட்டுதல்