சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை

நோக்கம்

சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை தொடர்பான ஆய்வுகள், திட்டங்கள், கல்விப்பணி மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது. சுற்றுச்சூழல் மாசு, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் மேலாண்மை, பேரழிவு மேலாண்மை போன்ற பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், மூலிகை அறிவியலில் தொடர்புடைய தாவிரவியல், மருந்தியல் போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், மூலிகைப் பண்ணையில் இந்திய மூலிகைகளைச் சேகரித்து வளர்த்துப் பாதுகாத்தல், அரிய மற்றும் அழிந்துவிடும் மூலிகை இனங்களை நவீன உத்திகளைக் கொண்டு (திசு வளர்ப்பு-முறை) பாதுகாத்தல், இந்திய மூலிகைகளில் பல்துறை ஆய்வுகள் மேற்கொண்டு தரப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டப்பெற்ற பொருள்களை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளுதல்.

முதுகலை சுற்றுச்சூழலியல் ஆய்வியல்

      • நிறைஞர் பட்டம்
      • முனைவர் பட்டம்
      • முடித்து அளிக்கப்பட்ட ஆய்வுத் திட்டங்கள்: 5
      • நடை பெற்று வருபவை: 3

 

ஆசிரியர்கள்

kavitha

முனைவர் கு.க. கவிதா
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்

Dr.Rakesh
முனைவர் டி. ராகேஷ் சர்மா
உதவிப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்