ஓலைச்சுவடித் துறை

மிகவும் பழமையான இலக்கியங்களைப் பல்வேறு வகையான எழுதுபொருள்களில் எழுதி வைத்திருக்கின்றனர். பனையோலைகளில் எழுதப்பெற்ற இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம் போன்ற நூல்கள் மிகப்பல. இப் பனை ஓலைகள் தட்ப வெப்பச் சூழ்நிலைகளாலும் சில்வர் ஃபிஷ், கறையான், பூஞ்சை காளான், புத்தகப்புழு போன்ற பூச்சிகளினாலும் அழியக்கூடிய தன்மை பெற்றவை. எனவே. இப்பனையோலைகளிலுள்ள பழமையான செய்திகளைப் பல்வேறு வகையான அறிவியல் ஊடகங்கள் மூலம் பதிவு செய்வதும், பதிப்பிப்பதும், மூலச் சுவடியைப் பாதுகாப்பதும் இன்றைய தேவையாகின்றன. இவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பெற்ற துறைகளில் ஒன்றே ஓலைச்சுவடித்துறை. இத்துறை இப்பல்கலைக்கழகம் தோன்றிய கி.பி. 1981ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பெற்றது.

நோக்கம்

உலகெங்கிலுமுள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பாதுகாத்தலும் பதிப்பித்து வெளியிடுதலும் இத்துறையின் தலையாய நோக்கங்களாகும். கோயில்கள், திருமடங்கள், கல்வி நிறுவனங்களிலும் வைத்தியர்கள், கவிராயர்கள் ஆகியோரிடத்தும், தனியாரிடத்தும், பல்வேறு வகையிலும் சிதறிக் கிடக்கின்ற, அழிந்து வரும் இலக்கணம், உரைநடை, இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சைவத்திருமுறை, சோதிடம், தத்துவம், தலபுராணம், மருத்துவம், மாந்திரீகம், மெய்கண்டசாத்திரம் போன்ற பொருண்மைகளில் இத்துறைச் சுவடிகள் அமைந்திருக்கின்றன. சுவடிகளைச் சி.டி. மைக்ரோஃபிலிம், செராக்ஸ் போன்ற அறிவியல் கருவிகள் கொண்டும் இத்துறை பதிவு செய்து பாதுகாத்து வருகிறது. இன்றியமையாத சுவடிகளைப் பதிப்பித்து ஆய்வு முன்னுரையுடனும் பல்வேறு குறிப்புகளுடனும் செம்பதிப்பாக வெளிக்கொணரும் பணியும் மேற்கொள்ளப்பெறுகிறது. இப்பணியுடன் ஏற்கெனவே வெளி வந்த நூல்களை மீண்டும் சுவடிகளுடன் ஒப்பிட்டுப் பாட வேறுபாடுகள், ஆய்வுக் குறிப்புகளுடன் செம்பதிப்புகளாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இப்பணிக்குத் துணைசெய்யும் வகையில் சுவடி நூலகம் ஒன்றையும், அச்சு நூல்களின் நூலகம் ஒன்றையும் இயக்கி வருகிறது.

சுவடிகள் நூலகம்

ஓலைச்சுவடித்துறை உருவாக்கப்பெற்ற 23 ஆண்டுகளில் ஏறக்குறைய 8,000 தமிழ் ஓலைச்சுவடிகளையும் 1000 தமிழ் ஆவணச் சுவடிகளையும் திரட்டிப் பாதுகாத்து வருகிறது. இத்துடன் சமஸ்கிருதம்(956), தெலுங்கு (68) மலையாளம் (12) தேவநாகரி(9) பாலி(1) போன்ற மொழிச் சுவடிகளையும் திரட்டி அறிவியல் முறைப்படி பாதுகாத்து வருகிறது.

ஆசிரியர்கள்


New Doc 2018-06-12_1

முனைவர் த.கலா ​​ஸ்ரீதர்
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

செய்திகளும் நிகழ்வுகளும்