வைத்திய சிந்தாமணி

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா. மாதவன்
வெளியீட்டு எண்: 260, 2003, ISBN:81-7090-320-3
டெம்மி1/8, பக்கம் 276, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக் ஓலைச்சுவடித் துறையிலுள்ள ஓலைச்சுவடிகளுள் இதுவரை அச்சிடப்பெறாத நூல் வைத்திய சிந்தாமணி இப்பொழுது பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் 724 பாடல்கள் வெண்பா, கலிவெண்பா, விருத்தப்பாக்கள் போன்ற யாப்பில் அமைந்துள்ளன. இது ஒரு திரட்டு நூலாகும். பல மருந்து செய்முறைகள் இப்பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

இந்நூல் உள்ள சுவடியில் செய்யுள்கள் மட்டுமே உள்ளன. இதற்கான உரை விளக்கங்களைப் பதிப்பாசிரியர் தனியே எழுதிச் சேர்த்துள்ளார். சித்த மருந்து செய்முறையில் இந்நூலிலுள்ள பல செய்முறைகள் மிகவும் பயனுடையன.

இந்நூலில் கூறப்பெறும் மருந்துப் பொருள்களின் பட்டியல் மற்றும் நோய்களின் பட்டியல் போன்றவை தனித்தனியே தொகுக்கப்பெற்றுப் பின்னிணைப்பாக அளிக்கப்பட்டுள்ளன. இவை ஆய்வாளர்க்குப் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்