தொலைநிலைக் கல்வி

தமிழ்ப்பல்கலைக்கழகம், தொலைநிலைகல்விக்கழகம்

எங்களைப்பற்றி….

தமிழர்மொழி, வரலாறு, பண்பாடு, கலைகள், அறிவியல், தத்துவம், தொழில்நுட்பவியல் ஆகியவற்றை ஆய்வுசெய்யும் உயராய்வு பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்விப்பணி உலகெங்கினும் இருக்கும் தமிழர்களுக்குப் பரவச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2006 ஆம் வெள்ளிவிழா ஆண்டில் தொடங்கப்பட்டது தொலைநிலைக்கல்வியகம்.

தமிழால் எதுவும் முடியும் என்ற உயரிய நோக்கிலும் உயர்தரக் கல்வியைப் பகிர்ந்து அளிக்கின்ற வகையிலும் உருவாக்காப்பட்டதே தொலைநிலைக்கல்வித்திட்டம். தமிழ் மரபுசார்ந்த கலை, அறிவியல் தொழிநுட்பங்களைத் தலைமுறைகள் பயன்கொள்ள வழிவகை செய்தல்; கல்வி கற்கும் வாய்ப்பு வளம் அமையப்பெறாத சமுகத்திற்கு எளிய வகையில் அவ்வாய்ப்பினை வழங்குதல்; தமிழர் தம் மரபுவழி சார்ந்த அரிவியல் தொழில்நுட்பங்கள், மொழி, இலக்கனம், இலக்கியம், வரலாறுதத்துவம், கலைகள் ஆகிய அனைத்துத்துறைக் கல்விகளை அனைவரும் அறிந்து கொள்ள வழிவகை செய்தல் தமிழ்ப்பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வியின் முக்கிய நோக்கமாகும்.

பாமரரும் பட்டங்கள் பெறவேண்டும் என்னும் அரியநோக்கில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த கல்விமையங்கள் வழியாக தக்கவழிகாட்டிகளுடன் தலைசிறந்த கல்வியை அளிக்க தமிழ்ப்பல்கலைக்கழகம் தன்னை மேன்மைப்படுத்திக் கொண்டுள்ளது.

முனைவர் பா.ஜெயக்குமார்

இயக்குநர்(பொ)
தொலைநிலைக் கல்வி இயக்ககம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தொலைநிலைக் கல்வி இயக்கக இணையதளம் செல்ல: இங்கே சொடுக்கவும்

செய்திகளும் நிகழ்வுகளும்