பதிப்புத்துறை மற்றும் அச்சகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்கலைக்கழக ஆய்வுத் திட்டப் பணிகள், பல்கலைக்கழக நல்கைக் குழுவின் நிதி நல்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் குறுங்கால-பெருந்திட்ட ஆய்வுப் பணிகள், துறைக் கருத்தரங்கங்களின் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் முதலியவற்றைப் பதிப்புத்துறை நூல்களாக அச்சிட்டு வெளியிடுகிறது.

அன்றியும் துறைதோறும் தமிழில் நூல்கள் வெளி வரவேண்டியதன் இன்றியமையாமையைக் கருத்திற்கொண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் முதலிய துறைகள் சார்ந்த வல்லுநர்கள் எழுதி அளிக்கும் நூல்களும் பதிப்புத்துறையின் வாயிலாக அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழக நிதிப்பிரிவு ஆண்டுக் கணக்கு விவரங்கள், பல்கலைக்கழகத்தின் பல்வேறு படிப்புகள் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள், விவரக் கையேடுகள், விடைத்தாள்கள் முதலியவற்றையும் நேர்வுக்கேற்ப அமையும் பிறவற்றையும் பதிப்புத்துறை அச்சிட்டளிக்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்