மக்கள் தொடர்புப் பிரிவு

அனிச்ச மலர் முகர்ந்த அளவில் வாடும், விருந்தினரோ முகம் வேறுபட்டு பார்த்த அளவிலேயே வாடிவிடுவர். அனிச்ச மலரினும் மென்மைத் தன்மைவாய்ந்த விருந்தினர்களை, வாடாது காக்கும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பினை உடையது மக்கள் தொடர்புப் பிரிவு.

இப்பிரிவில், மக்கள் தொடர்பு அலுவலர், புலவிருந்தகக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உணவக உதவியாளர்கள் போன்ற பணிகளைச் செய்யும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

செய்திகளும் நிகழ்வுகளும்