சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதி – 1

பதிப்பாசிரியர்: முனைவர். இரா. சாரங்கபாணி
வெளியீட்டு எண்:52-1, 1986, ISBN: 81-7090-054-9
டெம்மி 1/4, பக்கம் 580, உரூ. 400.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு 2003
முழு காலிகோ

இம்முதல் தொகுதியில் ‘அகரம்’ முதல் ‘ஔகார’ விறுவாயுள்ள சொற்களுக்கு விளக்கங்கள் எழுதப்பெற்றுள்ளன.

இது சங்கப்பாடல்களின் தொகுப்பான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் சங்க இலக்கியங்களிலுள்ள செய்திகளைத் தருவது.

அரசர், புலவர், குறுநிலமன்னர், விலங்கினங்கள், புள்ளினங்கள், பயிரினங்கள் பற்றியும், அறம், சமயம், அரசியல், வரலாறு, சமூக இயல், பண்பாடு, கலை நாகரிகம், மலைகள், ஆறுகள், ஊர்ப் பெயர்கள், உணவு வகைகள், குடி வகைகள், ஆடை அணிகலங்கள், தெய்வம், மரபுகள், பழக்க வழக்கங்கள் போன்ற சங்க காலத் தமிழர்களின் பல்வேறு செய்திகளையும் இக்களஞ்சியம் மூலம் அறியலாம்.

சங்க இலக்கியத்தின் மூலச்செய்யுள்களை நேரடியாக வைத்துப் பட்டாங்குச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆதலின் இக்களஞ்சியம் மெய்யான ஆதாரமாகக் கொள்ளும் தகுதியுடையது.

செய்திகளும் நிகழ்வுகளும்