இசைத்தமிழ் வரலாறு (இரண்டாம் பகுதி)

நூலாசிரியர்: பேரா. து.ஆ. தனபாண்டியன்
வெளியீட்டு எண்: 310, 2006, ISBN:81-7090-371-8
டெம்மி1/8, பக்கம் 256, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இசைத்தமிழ் வரலாறு என்னும் இந்நூலின் முதற்பகுதி 1994ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இதன் இரண்டாவது பகுதியான இந்நூலில், திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம் முதல் சேக்கிழாரின் காலம் வரையிலான இசைச் செய்திகள் பன்முக நிலையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இசைக்கப் பெற்ற இசைக் கருவிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பற்றிய பல செய்திகள் தமிழிசை வரலாற்றிற்குப் பெருந்துணையாகும்.
யாழ் நலம் கூறும் காப்பியங்கள், சிந்தாமணி வழங்கும் இசைக் குறிப்புகள், சங்கத் தமிழ்ப் புலவலர்கள், அருங்கலை போற்றிய பல்லவர்கள், பண் சுமந்த பாடல்கள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், உள்ளமுருக்கும் இசைப்பாடல்கள், முத்தமிழ் வளர்த்த சோழ மன்னர்கள், அமுத இசையில் அமைந்த திருவிசைப்பா, சேக்கிழார் தரும் இசைச் செய்திகள் போன்ற தலைப்புகளில் நூலாசிரியர் அளித்துள்ள தகவல்கள் இசைத்தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுடையவனவாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்