சங்கரதாசு சுவாமிகளின் நாடகப் பாடல்கள்

தொகுப்பாசிரியர்கள்: பேரா. து.ஆ. தனபாண்டியன்,
முனைவர் ஞானாம்பிகை குலேந்திரன், முனைவர் இ. அங்கற்கண்ணி
வெளியீட்டு எண்:109, 1989, ISBN: 81-7090-129-4
கிரவுன்1/4, பக்கம் 176, உரூ. 30.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

சங்கரதாசு சுவாமிகள் தாம் இயற்றியுள்ள நாடகப் பாடல்களுக்குக் கருநாடக இசையில் இனிய வர்ண மெட்டுக்களை அமைத்துள்ளார். வருங்காலத்தில் இந்த மரபு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இந்நூல் வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 96 பாடல்களுக்கான இராகம், தாளம் ஆகிய குறிப்புகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பெற்றுள்ளன.

நாடக நடிகர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்