சுந்தரர் தேவாரப் பாடல்களில் இசை

நூலாசிரியர்: முனைவர். இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: 262, 2003, ISBN:81-7090-322-x
டெம்மி1/8, பக்கம் 232, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சுந்தரர் அருளிச்செய்த பாடல்களிலுள்ள இசைக் கூறுகளை மையமாக வைத்து இந்நூலில் ஆராயப்பெற்றுள்ளது. சுரதாளம் அமைக்கப்பெறாத பாடல்களுக்குச் சுரதாளக் குறிப்பு அமைத்து விளக்கப்பட்டுள்ளன. தமிழிசை ஆய்விற்கு இந்நூல் நல்வரவாகும்.

சுந்தரர் பதிகங்களின் இயலிசை அமைப்பு, சுந்தரர் பதிகங்களில் பண்கள், சுந்தரர் கையாண்டுள்ள பண்களும் பதிகங்களும், சுந்தரர் பதிக இசை ஆகிய நான்கு இயல்களில் ஆசிரியர் விரிவாக ஆராய்ந்து இந்நூலை வழங்கியுள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்