புல்லாங்குழல் – ஓர் ஆய்வு

நூலாசிரியர்: பேரா. து.ஆ. தனபாண்டியன்
வெளியீட்டு எண்: 133, 1991, ISBN: 81-7090-168-5
டெம்மி 1/8, பக்கம் 250, உரூ. 50.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

உலகின் பல்வேறு நாடுகளில் தொன்னெடுங்காலம் தொடங்கி வழக்கிலிருந்த பல்வகைக் குழல்கள் பற்றியும், தமிழர் கைவழி வந்த குழல் வகைகள் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.

குழலின் தோற்றம், தொன்மை, சிறப்பு, முதன்மை, பல்வகைக் குழல்கள், பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ள மூவகைக் குழல்கள், ஐந்து துளைக் குழல்கள், குழலோன் தகைமை, அமைப்பு, இசைக்கும் முறை, குழலிசை மரபை உருவாக்கிய மேதைகள், கலைஞர்கள் போன்ற தலைப்புகளில் குழல் பற்றிய ஆய்வினை ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.

இசைக்கருவிகள் குறித்த ஆய்வுகளுக்குத் துணையாக இந்நூல் அமைகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்