அறுவகை இலக்கணம்

பதிப்பும் உரையும்: புலவர் ப.வெ.நாகராசன்
வெளியீட்டு எண்: 139, 1991, ISBN: 81-7090-175-8
டெம்மி 1/8, பக்கம் 622, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் படைத்துள்ள அறுவகை இலக்கணம் என்னும் புதுநூல் இப்பொழுது முதன்முதலாக அச்சில் வெளிவந்துள்ளது. தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களுடன் புலமை இலக்கணம் என்னும் இலக்கணத்தையும் இணைத்துத் தமிழிலக்கணம் என்பது அறுவகைப்பட்டது என ஆசிரியர் துணிந்து கூறுகிறார்.

இப்பதிப்பிற்கு நூலாசிரியர் தம் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி மூலப்படியே ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இப்புதிய நூலுக்குரிய உரையினைப் புலவர் ப.வெ.நாகராசன் அவர்கள் வரைந்துள்ளார்.

இப்பதிப்பு பெரும்பாலும் நூற்பா, பொழிப்புரை, விளக்கம், மேற்கோள் இலக்கியங்கள் என அமைக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில், சாத்து கவிகள், நூற்பா முதற்குறிப்பு அகரநிரல், மேற்கோள் இலக்கண நூற்பா அகரநிரல், மேற்கோள் இலக்கியப்பா அகரநிரல் ஆகியன இடம் பெற்றுள்ளன.

தமிழ் இலக்கண வளர்ச்சி வரலாற்றில் இப்படைப்பு அனைவருக்கும் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்