தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்

நூலாசிரியர்: முனைவர். சோ. த. கந்தசாமி
வெளியீட்டு எண்: 278, 2004, ISBN:81-7090-341-6
டெம்மி1/8, பக்கம் 400, உரூ. 160.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல் வெண்பாவின் யாப்பியல் சிறப்புக் கூறுகளை ஆராய்ந்துரைக்கின்றது. குறிப்பாகக் கல்வெட்டுக்களில் காணப்பெறும் வெண்பாக்களைத் தொகுத்து ஆராயப்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் பண்பாடு, சமய நம்பிக்கைகள், வீரம், கொடை, அறம், அரசு, சமுதாயம் முதலிய பல கூறுகளைத் தெளிவுறுத்தும் ஆவணங்கள் இப்பாடல்கள் என்பதை விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

கல்வெட்டுப்பாவியல், மெய்க்கீர்த்திகளும் யாப்பியலும், கல்வெட்டுப்பாவினவியல் என்னும் மூன்று இயல்களிலும் தெளிவாக ஆய்வின் முடிபுகள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.

தமிழ் யாப்பியல் கோட்பாடுகள் அனைத்தையும் ஆராய்ந்து எழுதப்பெற்ற இந்நூல் யாப்பியல் ஆய்வில் ஓர் அரிய வரவாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்