நான்மணிக்கடிகை மூலமும் பழைய உரையும்

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா, மாதவன்
வெளியீட்டு எண்: 231, 2001, ISBN:81-7090-291-6
டெம்மி1/8, பக்கம் 238, உரூ. 130.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையிலுள்ள சுவடியை அடிப்படையாகக் கொண்டு, பிற நூலகங்களிலுள்ள சுவடிகளையும் பழைய பதிப்புகளையும் ஒப்பு நோக்கி இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல இடைச்செருகல்கள், மிகைப்பாடல்கள் களையப்பட்டு, சிறந்த திருத்தமான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன.

இப்பதிப்பில், சுவடியில் உள்ளவாறே ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் பழைய உரைகள் கொடுக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து, பொருளுரை, கருத்துரை, விளக்கவுரை ஆகியன தகுந்த மேற்கோள்களுடன் பதிப்பாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பெற்றுள்ளன.

தமிழர் தம் வாழ்வு நெறிகளை விளக்கும் அரிய கருத்துக் கருவூலங்களுள் ஒன்றான இந்நூல் அனைவருக்கும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்