ஆத்திச்சூடி உரை

நூலாசிரியர்: ரா. இராகவையங்கார்
பதிப்பாசிரியர்: மு சண்முகம் பிள்ளை
வெளியீட்டு எண்:39, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 146, உரூ. 40.00
முழு காலிகோ

ஔவையாரால் எழுதப்பட்டது ‘ஆத்தி சூடி” நூல். ‘அறஞ் செய விரும்பு’ என அகரமுதலில் தொடங்கி ‘அம்ம வோர்ந்து வழி போ’ என வகர வருக்கம் ஈறாக மொழி முதலாம் எழுத்துக்களைக் கொண்டு அகர வரிசையில் அமைந்துள்ளது இந்நூல்.

இந்நூலுக்கு மகாவித்துவான் ரா.இராகவையங்கார் நுட்பமும் திட்பமும் வாய்ந்த அகலவுரை எழுதியுள்ளார். இவ்வுரை தெளிவாகவும் விரிவாகவும் அமைந்துள்ளது. பதிப்பில் பிறர் கொண்ட பாடங்களையும் உரைகளையும் சிற்சில இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த உரை திட்ப நுட்பம் செறிந்த அரியதோர் ஆய்வுரையாகவும் விளக்கவுரையாகவும் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்