ஆராய்ச்சித் தொகுதி

நூலாசிரியர் : மு. இராகவையங்கார்
வெளியீட்டு எண் : 4, 1984, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 552, உரூ 100.00, முதற்பதிப்பு
நிழற்பட மறுபதிப்பு: உரூ 280.00
முழு காலிகோ

திரு.மு.இராகவையங்கார் தமிழ் ஆய்வாளர்க்கு முன்னோடியாக விளங்கியவர். அவரது இத்தொகுப்பு முதலில் 1938இல் அச்சேறியது. 1964இல் மறுபதிப்பு வந்தது. இப்பொழுது நிழற்படப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதிப்பில் தொகுக்கப்பட்டுள்ள 35 கட்டுரைகள் அனைத்திலும் ஆராய்ச்சி நயம் சிறந்து விளங்குதல் காணலாம். இலக்கியம், இலக்கணம், மொழிநூல், எழுத்து வரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, நாட்டு வரலாறு, சமயம், பண்டையாசிரியர்கள், பண்டைத்தமிழ் மக்களின் ஒழுக்க நெறி, சிலாசாசனங்கள், இடப் பெயர்கள், பண்டைச் சான்றோர்கள் போன்ற பல பொருள்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்