கண் நோய்களும் நவீன மருத்துவமும்

நூலாசிரியர்: டாக்டர். த. கோ. சாந்திநாதன்
வெளியீட்டு எண்: 339, 2009, ISBN: 978-81-7090-382-6
டெம்மி1/4, பக்கம் 1010, உரூ. 700.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

கண்நோய்கள் பற்றியும் அந்நோய்களுக்குரிய மருத்துவம் பற்றியும் ஆங்கில நூல்களுக்கு நிகராகத் தமிழில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மருத்துவ நூலாசிரியர் ஏராளமான படங்களுடனும் அதற்குரிய விளக்கங்களுடனும் இதனை எழுதியுள்ளார்.

மெய்யியல் மற்றும் இயக்கவியல், இமைகளில் தோன்றும் நோய்கள், கண்ணீரியல் நோய்கள், விழிவெண் சவ்வுப்படல நோய்கள், கருவிழிப் படலம் மற்றும் வெண்விழிப்படல நோய்கள், விழி ஆடி நோய்கள், விழிப்படிக நோய்கள், கண் அழுத்த நோய், கண் வண்ணப்படல நோய்கள், உட்கண் கட்டிகள், விழித்திரை ரத்தநாள நோய்கள், மையப்புள்ளி பாதிப்புகள், விழி மைய செயலிழப்பு, விழித்திரை விலகல், விழிக்குழி நோய்கள், ஒளி விலகலால் ஏற்படும் குறைபாடுகள், கண்ணில் ஏற்படும் காயங்கள், நம்பியல் சார்ந்த நோய்கள், பார்வை இழப்புக்கான காரணங்கள், நவீன ஸ்கேன் பரிசோதனைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் மிக விரிவாக இந்நூலை உருவாக்கியுள்ளார்.

கண் மருத்துவர்களுக்கு மட்டுமன்றிப் பொது மக்களுக்கும் பயன் தரும் வகையில் தமிழில் இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்