கலித்தொகை

பதிப்பாசிரியர்: இ.வை.அனந்தராமையர்
வெளியீட்டு எண் : 2, 1984, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 1224, உரூ.150.00
நிழற்படப் பதிப்பு
முழு காலிகோ

சங்க மருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் 1925இல் இ.வை.அனந்தராமையர் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. இதில் இவர் பல மேற்கோள்களை அடிக்குறிப்பாகக் காட்டியுள்ளார். இவை புலவர்க்கு விருந்து; பயில்வோருக்கும் ஆய்வோருக்கும் கைவிளக்கு. கிடைத்தற்கரிய அப்பதிப்பு இப்பொழுது நிழற்படப்பதிப்பாக வெளியிடப் பெற்றுள்ளது. பதிப்பாசிரியரால் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பெற்றது. ஒரே தொகுதியாக்கப்பட்டுள்ளது. பதிப்பின் பின்னிணைப்பாக அரும்பதம் முதலியவற்றின் அகராதி இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தொகுத்தெழுதியளிக்கப் பெற்றுள்ளமை அனைவர்க்கும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்