குறுந்தொகை மூலமும் உரையும்

பதிப்பாசிரியர்: மு.சண்முகம் பிள்ளை
வெளியீட்டு எண்: 30, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 860, உரூ. 140.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இப்பதிப்பு பல்வகை ஆய்வுப் பகுதியுடன் கூடியதாகும். பதிப்பாசிரியர் தம் முகவுரையில் தொகை நூல் வரலாறு, தொகுப்பு வரலாறு, பதிப்பு வரலாறு, பழைய உரை, பாட வேறுபாடுகள், புதிய பாடல்கள், ஆய்வுப்பாட நுண்மதிப்பு போன்றவற்றை விளக்கியுள்ளார்.

பாடல்களுக்கு விரிவான உரைகள் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட வேறுபாடு ஒப்புநோக்கு அட்டவணை, பாடினோரும் பாடக்குறிப்பும், பாடலில் சுட்டப்பெற்றோர், திணைமுறை, கூற்றுவகை தொடரடைவு, சொல்லடைவு, ஆகியவற்றை முழுமையாகத் தொகுத்துப் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது ஒரு விரிவான ஆய்வுப் பதிப்பாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்