சீவக சிந்தாமணி

பதிப்பாசிரியர்: டாக்டர் உ.வே. சாமிநாதையர்
வெளியீட்டு எண்:58, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 1756, உரூ:265.00,
நிழற்பட மறுபதிப்பு
முழு காலிகோ

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும் முதன்முதலாக டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களால் 1887 இல் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1957 வரை ஆறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஏழாவது பதிப்பு 1969ஆம் ஆண்டு தியாகராச விலாச வெளியீடாக வந்துள்ளது. இதன் நிழற்பட மறுபதிப்பினை இப்பொழுது தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பில், முதல் மூன்று பதிப்புகளின் முகவுரைகள், நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, சீவகன் சரித்திரச் சுருக்கம், செய்யுள் முதற்குறிப்பகராதி போன்றவற்றுடன், உரையில் வரும் மேற்கோள் நூல்களின் அகரவரிசையும், மேற்கோள் பாடல்களின் முதற்குறிப்பும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்