சீவேந்திரர் சரிதம்

பதிப்பாசிரியர்: மு.சண்முகம் பிள்ளை
வெளியீட்டு எண்:41, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 422, உரூ. 70.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

சீவக சிந்தாமணிக் காவியத்தை அடியொற்றிச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய அம்மானைக் கதைப்பாடல் நூல் சீவேந்திரர் சரிதம். இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாயிரம் நீங்கலாக 10 இலம்பகப் பிரிவும் காணப்படுகிறது. நூல் 3284 அடிகளில் முற்றுப்பெறுகின்றது. முனைவர்.ச.கிருட்டிணமூர்த்தி அவர்கள் குறிப்புரை வரைந்துள்ளார். பின்னிணைப்பாகத் தொகுக்கப்பட்டுள்ள பாடவேறுபாடுகள், சொல்லடைவு ஆகியன மிகவும் பயனுடையன.

செய்திகளும் நிகழ்வுகளும்