தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பகுதி

நூலாசிரியர் : முனைவர் சோ. ந. கந்தசாமி
வெளியீட்டு எண்:105-1, 1989, ISBN
டெம்மி1/8, பக்கம் 864, உரூ. 100.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

இந்நூல் அறிமுகவியல், உறுப்பியல், பாவியல் என்ற மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. அறிமுகவியலில் யாப்பியல் ஆய்வின் நோக்கமும் பயனும், ஆய்வுத்திட்ட வரைவும் ஆய்வு மூலங்களும், ஆராய்ந்த முறைகளும் விளக்கப் பெற்றுள்ளன. உறுப்பியலில் பாக்களின் அமைப்பிற்குரிய புறத்துறுப்புகள், அகத்துறுப்புகள் முதலின பற்றிய கருத்துக்கள் ஆய்வு நோக்கில் விளக்கப்பெற்றுள்ளன. பாவியலில், யாப்பிலக்கண நூல்களும் பாக்களும், பாட்டியலும் பாக்களும், இலக்கியத்தில் பாக்களின் ஆட்சி ஆகிய மூன்றும் விளக்கப்பெறுகின்றன.

தொல்காப்பியர் காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை வளர்ந்து வந்துள்ள யாப்பியல் மரபுகளையும் புதுமைகளையும் நூற்றாண்டு அடிப்படையில் தக்க ஆதாரங்களையும் மேற்கோள் சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் நுட்பமாகவும் திட்பமாகவும் விரிவாக ஆராய்ந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.

ஆய்வில் கண்டறிந்த உண்மைகளையும் முடிபுகளையும் ஒவ்வோரியலின் முடிவில் தொகுத்துச் சுட்டியிருத்தல் நோக்கத்தக்கது.

செய்திகளும் நிகழ்வுகளும்