நாலடியார் மூலமும் செம்பூர் வித்துவான் வி. ஆறுமுகஞ் சேர்வை விரிவுரையும்

வெளியீட்டு எண்: 395, 2013, ISBN:978-81-7090-438-0
டெம்மி1/8, பக்கம் 960, உரூ. 680.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சைன முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகஞ்சேர்வை விரிவுரையும் இணைந்த அரும்பெரும் நூலாக இப்பொழுது வெளியிடப்பெற்றுள்ளது.

இவ்விரிவுரை மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருள் விளக்கம், நயமான பகுதிகள், இலக்கணக் குறிப்புகள் எனப் பல செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பண்டைய தமிழ் இலக்கியங்களை ஆராய்வோர்க்கும் மாணாக்கர்கட்கும் அரிய கருவூலமாக இந்நூல் திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்