மீன்கள் அன்றும் இன்றும்

நூலாசிரியர்: முனைவர் ச. பரிமளா
வெளியீட்டு எண்: 135, 1991, ISBN: 81-7090-170-7
டெம்மி 1/8, பக்கம் 296, உரூ. 70.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

மீன்கள் பற்றிய பழைய வரலாற்றையும் புதிய அறிவியற் சிந்தனைகளையும் தாங்கி வந்துள்ளது இந்நூல். இலக்கியம், சித்த மருத்துவம், புதிய உயிரியல் கண்டுபிடிப்புகள், நீலப்புரட்சி எனப் பல கோணங்களில் மீன்கள் பற்றிய செய்திகளை விளக்க முற்பட்டுள்ளது இந்நூல்.

அன்று முதல் இன்றுவரை காணப்படும் மீன் வகைகள், அவற்றின் வாழ்க்கை முறை, அவற்றால் விளையும் பயன்கள் போன்றவை இந்நூலில் தொகுத்தளிக்கப்பெற்றுள்ளன.

மீன் இனப்பெயர்களையெல்லாம் வழக்கு வடிவம், ஆங்கிலப் பெயர், அறிவியற் குடும்பப்பெயர், இலக்கியப்பெயர் எனப் பட்டியலிட்டும் உருவப்படம் காட்டியும் இந்நூலில் விளக்கப்பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்