தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50

(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
பதிப்பாசிரியர் : புலவர் செ. இராசு
வெளியீட்டு எண் : 1, 1983, ISBN :
கிரவுன் ¼, பக்கம் 356, உரூ. 150.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் ஐம்பது என்னும் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிடும் முதலாய்வு நூல் ஆகும். செப்பேடுகள் காலவரிசையும், மொழியமைதியும் கருதி இந்நூலில் உள்ளவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இச்செப்பேடுகளில் 17,18,19ஆம் நூற்றாண்டின் வரலாறு, சமூக, சமய, பொருளாதாரச் செய்திகள் பல புதைந்து கிடக்கின்றன.

தமிழ்ச் செப்பேடுகள் பெரும்பாலும் தொடர்புடைய அந்தந்தக் கோயிலின் இறைப்படிமங்களின் வரைகோட்டு ஓவியங்களைப் பெற்றிருப்பது இவற்றின் தனிச்சிறப்பாகும்.

வரலாற்றுக் குறிப்புக்களுடன் அக்காலத்தின் எழுத்து முறை, ஓவியங்கள், ஓவியங்களின் தன்மைகளை ஆய்வு செய்யவும் துணை புரிவதோடு, மராட்டியர் காலநிலையை அறியவும் இவை பெருந்துணை புரிகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்