இந்துத் திருமணச்சட்டம்

(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
நூலாசிரியர்: புலமை. வேங்கடாசலம்
வெளியீட்டு எண்:65, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 150, உரூ. 48.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழை முழுக்க முழுக்க நீதிமன்ற மொழியாக ஆக்கும் விதத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பல்வேறு சட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான பணியை மேற்கொண்டுள்ளது. இப்பணியின் முதல் முயற்சியாக, இந்நூல் வெளிவந்துள்ளது.

இந்நூல், ஆங்கிலச்சட்ட விளக்க நூல்களைப் போன்று சட்டப்பிரிவுகள், விளக்கங்கள், வழக்குத் தீர்வுகள் ஆகியவற்றைக் கொண்டதாகும். தமிழில் இந்த அமைப்பு முறையில் எந்தச் சட்ட நூலும் இதுநாள் வரை வெளிவந்ததில்லை. இது தமிழில் ஒரு முதல் முயற்சியாகும். மிகவும் பயனுடைய நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்