தஞ்சை நகரிய சக்திக் கோயில்கள்

நூலாசிரியர்: முனைவர் க. குளத்தூரான்
வெளியீட்டு எண்: 177, 1994, ISBN:81-7090-225-8
டெம்மி1/8, பக்கம் 256, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், தஞ்சை நகரத்தில் அமைந்துள்ள அறுபத்து மூன்று சக்திக் கோயில்கள் பற்றிய செய்திகள் விளக்க முறையில் ஆராயப்பட்டுள்ளன.

தஞ்சை நகரச் சக்திக் கோயில்களின் சமய வழிபாட்டு நெறிகள், சிற்பக்கலை, கோயில் அமைப்பு, கட்டடக்கலை ஆகியவை பற்றிய செய்திகள் முதலில் விளக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சக்திக்கோவில்களின் அமைவிடம், திசை, பரப்பு, வரலாறு, கல்வெட்டுச் செய்திகள், சிற்பக்கலை, கோயில் அமைப்பு, சமய வழிபாட்டு நெறிகள் முதலிய செய்திகள் தொடர்ந்து கூறப்பட்டுள்ளன.

கோயில்கள் பற்றிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்