பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும் (முதல் 200 பாசுரங்கள்)

தமிழாக்கம்: முனைவர். தெ. ஞானசுந்தரம்
வெளியீட்டு எண்: 8, 1984, ISBN:
கிரவுன் 1/8, பக்கம் 684, உரூ. 180.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

பெரிய திருமொழி முதல் இருநூறு பாசுரங்களுக்குப் பெரியவாச்சான் பிள்ளை வரைந்த உரை தமிழாக்கத்தோடு வெளிவந்துள்ளது. இந்தப் புதிய பதிப்பில், பாசுரம், பதவுரை, சிறப்புக்குறிப்பு, வியாக்கியானம், தமிழாக்கம், ஒப்புமைப் பகுதிகள் ஆகியன அடங்கியுள்ளன. பாசுரங்கள் யாப்புக் கெடாத வகையில் பிரிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பாட வேறுபாடுகள் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன.

இந்தத் தமிழாக்கம், வடமொழியறிவின்மையால் முழுப்பொருள் அறிய இயலாது வருந்தும் தமிழன்பர்களுக்குப் பெரிதும் பயன்படும். வைணவ தத்துவத்தை விளக்கவும் விரிவாக்கவும் இந்த நூல் துணை செய்யும்.

செய்திகளும் நிகழ்வுகளும்