வைணவச் செல்வம் (தொகுதி -1)

நூலாசிரியர்: முனைவர் ந. சுப்புரெட்டியார்
வெளியீட்டு எண்: 194அ, 1995, ISBN:81-7090-243-6
டெம்மி1/8, பக்கம் 634, உரூ. 150.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்தியத் திருநாட்டில் வேதத்தின் அடிப்படையில் நிலவி வரும் சமயங்களில் முன்னிற்பது வைணவம். சங்ககால எட்டுத்தொகை நூல்களில் வைணவக் கடவுளான திருமாலின் பரம்பொருள் தன்மைகள் குறித்த செய்திகள் பேசப்பட்டுள்ளன. இவை குறித்தும் வைணவம் பற்றியதுமான செய்திகளை அளிக்கும் களஞ்சியம் இவ்வரிய நூல்.

இந்நூலில், வரலாற்று முறையில் வைணவம் தோன்றி வளர்ந்த முறை, பண்டைத் தமிழ் நூல்களில் கூறப்பெறும் திருமால் வழிபாடு, வைணவத் தத்துவங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வைணவ மந்திரங்கள், வைணவ இரகசிய கிரதங்கள் விரிவாக விளக்கப்பெற்றுள்ளன. தமிழில் வைணவம் பற்றிய முழுமுதல் நூலாக இது விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்