சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்

நூலாசிரியர்: குடவாயில் எம்.பாலசுப்பிரமணியன்
வெளியீட்டு எண்:82, 1987, ISBN:81-7090-094-8
டெம்மி 1/8, பக்கம் 459, உரூ. 60.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: உரூ.170.00 (2010)
சாதா கட்டு

ஏழாவது நூற்றாண்டு முதல் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஆண்ட, மன்னர்கள், ஆட்சி அலுவலர்கள், புலவர்கள், துறவியர், மகளிர் முதலியோரது சிலை வரலாறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர் இருநூறு சிலைகளை நேரிற்கண்டு ஆய்வு செய்து தனித்தனியே ஒவ்வொன்றின் வரலாற்றையும் தெளிவாகத் தந்துள்ளார். இவர் கண்டுள்ள சில புதிய முடிவுகள் வரலாற்றுக்குச் சான்றாகத் தக்கவையாக உள்ளன.

சிற்பங்கள், படங்கள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. சிற்பத்துறை ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பயன் மிக நல்கும்.

செய்திகளும் நிகழ்வுகளும்