தமிழ்நாட்டு ஓவியங்கள்

பதிப்பாசிரியர்: திரு. ஏ.எஸ். இராமன்
வெளியீட்டு எண்: 314, 2006, ISBN:81-7090-375-0
டெம்மி1/8, பக்கம் 149, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தொல்பழங்காலம், பழங்காலம், சங்க காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், நிகழ்காலம் எனக் கால அடிப்படையில் ஓவியங்கள் பற்றிய ஆய்வுக் கருத்துக்களைக் கூறும் கட்டுரைகளுடன், தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும் ஓவியங்கள் பற்றிய செய்திகள், ஓவியத்திற்கும் நாடகத் துறைக்கும் இடையேயுள்ள தொடர்புகள், கலை பற்றிய கலைஞர்களின் கருத்தமைப்பு, கலைஞர்களின் உள்ளம், கலைஞர்களின் அனுபவம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
அறிஞர்கள் இரா. நாகசாமி, என். அரிநாராயணா, ஏ.எஸ். இராமன், கே.பி. ராமன், ந. சுப்பிரமணியன், கே.ஆர். சீனிவாசன், மு. அருணாசலம், என்.வி. இராமநரசன், லீலா கணபதி, வி.ஆர். அம்பேத்கர், ஏ.வி. ஜயசந்திரன், எல். முனுசுவாமி, கார்ல் கண்டாலவாலா ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரைகள் ஓவியக்கலை ஆய்வுக்குப் பல அரிய தகவல்களைத் தருகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்