சுவடிப்பதிப்பு நெறிமுறைகள்

பதிப்பாசிரியர்: முனைவர் த. கோ. பரமசிவம்
வெளியீட்டு எண்:108, 1989, ISBN: 81-7090-128-6
டெம்மி1/8, பக்கம் 384, உரூ. 38.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

22, 23, 24-03-1988 இல் நடைப்பெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற 31 ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

சுவடியியலைச் சார்ந்த அடிப்படைக் கருத்துக்களைப் பல கோணங்களில் இக்கட்டுரைகள் விளக்கி நிற்கின்றன. சுவடியியலை அறிமுகப்படுத்தும் பொதுச் செய்திகள், ஏட்டுச் செய்தியின் வரிவடிவம், பாட வேறுபாடு, யாப்பு நிலை இவற்றை உணர வேண்டிய பதிப்பாசிரியர் கடமை, தாள் சுவடிகள், செப்பேடுகள், பழந்தமிழ்ப்பதிப்புகள், இலக்கணம், கலை, மருத்துவம், சோதிடம் போன்ற பொருள்களைக் கூறும் சுவடிகளின் பதிப்பு முறைகள், சுவடிப்பதிப்பில் கணிப்பொறியின் பயன்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. இறுதியில் அமர்வுச் சிந்தனைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு அரிய துணை நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்