தமிழ்ச்சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதி – 1

பதிப்பாசிரியர்: முனைவர் த. கோ. பரமசிவம்
தொகுப்பாசிரியர்: முனைவர் வே. இரா. மாதவன், புலவர் ப.வெ. நாகராசன்
வெளியீட்டு எண்: 79-1, 1987, ISBN:81-7090-089-1 (Set No) 81-7090-088-3
டெம்மி 1/8, பக்கம் 748, உரூ. 85.00,
முழு காலிகோ

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையிலுள்ள ஓலைச்சுவடிகள் பற்றிய விளக்க அட்டவணையாக இந்நூல் அச்சிட்டு வெளியிடப்பெற்றுள்ளது. இம்முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ள சுவடிகளில் அடங்கிய நூல்களின் எண்ணிக்கை 500 ஆகும். நூலக வரிசை எண்ணில் அமைந்த வரிசை முறையிலேயே அடைவு செய்யப்பட்டுள்ளன. (1 முதல் 500 வரை)

பல்வேறு ஆசிரியர்களின் நூல்கள், பல்வேறு பொருளைச் சார்ந்த நூல்கள், பல்வேறு காலத்தில் மலர்ந்த நூல்கள் எனப்பலதரப்பட்ட நூல்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு நூலுக்குமான நூலகக்குறிப்புகள், நூல்விவரம். தோற்றக் கூறுகள், நூலின் தொடக்கம், முடிவு, முதற்குறிப்பு, பிற்குறிப்பு, பிற செய்திகள், மாற்றுச்சுவடிகள் காணுமிடம், வெளியீட்டுச் செய்திகள் ஆகியன எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் நூலாசிரியர் அகர வரிசை, நூற்பெயர் அகர வரிசை, பொருட்பகுப்பு வரிசை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

இதே அமைப்பினை இனிவரும் விளக்க அட்டவணைத் தொகுதிகளிலும் காணலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்