திருச்சிராப்பள்ளி மாவட்ட ஓலை ஆவணங்கள்

பதிப்பாசிரியர்: முனைவர் எ.சுப்பராயலு
வெளியீட்டு எண்: 138, 1991, ISBN: 81-7090-174-x
கிரவுன் 1/4, பக்கம் 136, உரூ. 50.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், நெறிஞ்சிலக்குடி என்ற ஊரில் ராமராவ் என்பவரிடமிருந்து பெற்ற ஓலை ஆவணங்கள் அடங்கிய நூல். ஆவணச்செய்தி, சேதி முதலியன அடங்கிய பட்டியல் முதலில் இடம் பெறுகின்றது. இந்த ஆவணங்கள் மூலம், மனை விற்பனை, ஈடு, ஒத்தி, உடன்படிக்கை, ஈட்டு மேல் கடன், அடிமைச்சீட்டு, இரசீது, பட்டா முதலியன தொடர்பான செய்திகளை அறிய முடிகிறது. குறியீடு ஒலிபெயர்ப்புகள் பிற்சேர்க்கையாகத் தரப்பெற்றுள்ளன.

ஆவணங்கள் பற்றிய ஆய்வுகளுக்குரிய அரிய துணை நூலாக இது திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்