பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

நூலாசிரியர்: முனைவர். மோ. கோ. கோவைமணி
வெளியீட்டு எண்: 359, 2010, ISBN: 978-81-7090-402-1
டெம்மி1/8, பக்கம் 547, உரூ. 170.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ் இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்புகளை முதன்மை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 36 இலக்கியப் பருவ இதழ்கள் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பெற்றுள்ளன. பருவ இதழ்கள் வெளியிட்ட சுவடிப் பதிப்புகளின் வகைகள் ஆராயப் பெற்றுள்ளன. பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு எனும் பகுதியில் இலக்கியப் பருவ இதழ்களில் வெளிவந்த 408 நூல்களுக்கான பதிப்பு வரலாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பருவ இதழ்களில் மருத்துவச் சுவடிப் பதிப்புகள் எனும் இறுதிப் பகுதியில் மருத்துவ நூல்களை வெளியிட்ட இதழ்களைப் பற்றியும், அவற்றில் இடம் பெற்ற மருத்துவ நூல்கள் பற்றியும், அவற்றின் பதிப்பு நிலை குறித்தும் ஆராயப் பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்