பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வாழ்வும் தொண்டும்

நூலாசிரியர்:பேரா. மு. சண்முகம் பிள்ளை
வெளியீட்டு எண்: 128-3, 1991, ISBN: 81-7090-173-1
கிரவுன்1/8, பக்கம் 178, உரூ. 32.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவர் தம் தமிழ்ப் பணிகள் குறித்த பல செய்திகளை இந்நூலில் காணலாம். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் 11-04-1991 அன்று நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலில், திரு ச.வையாபுரிப்பிள்ளையவர்களின் இளமை நிகழ்ச்சிகள், கல்வி மேம்பாடு¬¬, திருமணமும் திருவனந்தை வாழ்க்கையும், திருநெல்வேலி வாழ்க்கை, அகராதிப் பதிப்புப்பணி, பிறபணிகள், தமிழ்த் துறைத்தலைவர், ஓய்வுக்குப்பின், சென்னையில் இறுதி நாள்கள், புகழ்மாலை, ஆய்வு நூல்களின் வரலாறு, பதிப்பு நூல்களும் பதிப்பு முறையும் போன்ற தலைப்புகளில் பல செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன,

செய்திகளும் நிகழ்வுகளும்