நடிப்புக்கலை

நூலாசிரியர்: முனைவர். தா.ஏ. ஞானமூர்த்தி
வெளியீட்டு எண்: 319, 2006, ISBN:81-7090-380-7
டெம்மி1/8, பக்கம் 248, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ் நாடக இலக்கண மரபுகளை உள்ளடக்கிய மிக ஆழமான ஆய்வுநூல் இது. இந்நூலில் மேடையில் நாடக நடிப்புக்கு அடிப்படையான விதிகளும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. நாடக மேடையின் அமைப்பு, மேடையின் பகுதிகள் ஆகியவையும், நடிகர்களின் நடிப்புப் பயிற்சிக்குரிய பல கருத்துக்களும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் மேடையில் நிற்றற்குரிய முறை, திரும்பும் முறை, பிற நடிகர்களைக் கடக்கும் முறை, உணர்ச்சிகளுக்கேற்ப அவர்களின் இயக்கம், பாத்திரங்களுக்குரிய தொடர்பு முறை, நடிகர்கள் பேச்சை முழுப்பயன் பெறும் வகையில் பயன்படுத்தும் முறை, உச்சரிப்பு, குரல் வேறுபாட்டுப் பயிற்சி, சொல்லுக்குப் பொருத்தமான நடிப்பு, பாத்திரத்தைப் படைக்கும் முறை, சைகைகள் போன்ற நடிப்புக்குரியவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இயக்குநரின் தகுதிகள், பொறுப்புகள் விளக்கப்பட்டுள்ளன. ஒப்பனை பற்றியும், ஒலி, ஒளி பற்றியும் கூறப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்