அடிப்படைக் கட்டுமான வடிவமைப்பு

நூலாசிரியர்:க.செயகோபால்
வெளியீட்டு எண்:88, 1992, ISBN:81-7090-105-7
டெம்மி 1/8, பக்கம் 456, உரூ50.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

பொறியியலின் தமிழ் முதல் நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. வடிவமைப்பு அறிந்து வளமனை கட்டுவோருக்கு வாய்ப்பாகக் கிடைத்த ஒரு நூல் இது.

இந்திய தர நிருணய நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வாழ்வுடன் தொடர்புடைய உரிய எடுத்துக்காட்டுகளின் மூலம் வடிவாக்க முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

நூலின் முதல் அத்தியாயம் கட்டுமான வடிவமைப்பின் பொதுக் கருத்துக்களை விளக்குகிறது. அடுத்து, கொத்துவேலைக் கட்டுமானங்களின் வடிவக் கணக்கிடு விதிகள், மரத்தூண்கள், விட்டங்கள், சட்டங்களின் இணைப்பு, இவைப்பற்றிய வடிவக்கணக்கீட்டு முறைகள், இரும்புக் கட்டுமானங்கள், இரும்புச் சட்டங்களின் இணைப்பு முறைகள், இழுவிசை அங்கங்கள், அமுக்கப்பளு தாங்கும் தூண்கள், கம்பங்கள், உத்திரங்கள், தூலக்கட்டுகளின் வடிவமைப்பு போன்றவை விரிவாக விளக்கப்பெறுகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்