அகத்தியர் வைத்தியம் – 150

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா. மாதவன்
வெளியீட்டு எண்: 351, 2009, ISBN: 978-81-7090-394-9
டெம்மி1/8, பக்கம் 92, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையிலுள்ள அகத்தியர் சரக்கு சுத்தி -150 என்னும் சுவடி அச்சில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. இதில், 150 பாடல்கள் உள்ளன. மூலம் மட்டுமே அச்சிடப்பெற்றுள்ளது. பாடல்கள் அந்தாதி அமைப்பிலுள்ளன.

சரக்கு என்பது இங்கே மருந்துப் பொருள்களாகும். இவற்றை மருத்துவ முறைபடி சுத்தி செய்வது பற்றி இந்நூலில் விளக்கக் காணலாம்.

இந்நூலில், பற்பம், சிந்தூரம் போன்ற சில மருந்து செய்முறைகளும் கூறப்பட்டுள்ளன. இவற்றால் தீரும் நோய்களும் கூறப்படுகின்றன.

பின்னிணைப்பில், மருந்துப் பொருள்கள் அகரவரிசை, நோய்ப்பெயர்கள் அகரவரிசை போன்றவை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன.

சித்த மருந்துகள் செய்வோர்க்கும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுடையது இந்நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்