தன்வந்தரி வைத்தியக் கும்மி – 300 (சுவடிப்பதிப்பு)

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா. மாதவன்
வெளியீட்டு எண்: 264, 2004, ISBN:81-7090-324-6
டெம்மி1/8, பக்கம் 158, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையிலுள்ள ‘தன்வந்தரி வைத்தியக் கும்மி – 300’ என்னும் சுவடியை அடிப்படையாக்க் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கும்மிப்பாடல் யாப்பில் அமைந்த பாடல்கள் 300 இந்நூலில் உள்ளன. இவை அனைத்திலும் சித்த மருத்துவ மருந்து செய்முறைகள் பலவும் கூறப்பட்டுள்ளன. சுவடியில் செய்யுள் வடிவமே உள்ளது. உரை இல்லை என்பதால் பதிப்பாசிரியர் உரை விளக்கங்களை அங்கங்கேயே எழுதிச் சேர்த்துள்ளார்.

பல நோய்களுக்கான எளிய மருத்துவ முறைகளைக் கூறுவதாகவே இந்நூல் அமைந்துள்ளது. முழுவதும் நோயும் மருந்தும் பற்றி மட்டுமே விளக்குகிறது. தமிழ் மருந்து செய்முறைகளில் நல்ல பயிற்சியுடையோருக்கும், அனுபவ மருத்துவர்களுக்கும், சித்த மருத்துவம் பயிலும் மாணாக்கர்கட்கும், பொது மக்களுக்கும் இந்நூல் பெரிதும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்