நீரிழிவும் மருத்துவமும்

நூலாசிரியர்: முனைவர் ஐ. சாதிக்
வெளியீட்டு எண்:97, 1989, ISBN:81-7090-116-2
டெம்மி 1/8, பக்கம் 456, உரூ.40.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நீரிழிவு நோயின் தோற்றம், குறிகுணங்கள், இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள், (மூலிகைகள், பற்பங்கள், செந்தூரங்கள்) பற்றிப் பழமையான சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நோய் பற்றிய உலகிலுள்ள பல்வேறு ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருத்துவ மனைகளில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மூலிகை மருந்துகளில் அறிவியல் அடிப்படையில் எடுத்துக்கொண்ட ஆய்வு முயற்சிகளும் பெறப்பட்ட முடிவுகளும் இந்நூலின் இறுதிப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்துறையில் வளர்ந்துள்ள ஆய்வு முன்னேற்றங்களும் விளக்கப்பெற்றுள்ளன.

நீரிழிவுத் துறையில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.

செய்திகளும் நிகழ்வுகளும்