போகர் வைத்தியம் – 700

பதிப்பாசிரியர்கள்: மருத்துவர் சே.பிரேமா, ப.வெ.நாகராசன்
வெளியீட்டு எண்: 33, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 628, உரூ. 112.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இது ஒரு சித்த மருத்துவ நூல். பல பதிப்புகளைக் கண்டது. 700 பாடல்கள் கொண்ட இம்மருத்துவ நூலுக்கு உரை எழுதி இப்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது. பொதுவாக மக்களுக்கு உண்டாகும் பல்வேறு நோய்களுக்கான மருந்து செய்முறைகள் இதில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பொருள் குறிப்பு அகரவரிசை, நோய்க்குறிப்பு அகரவரிசை, மூலிகை, கடைச்சரக்குகள் அகரவரிசை போன்ற இணைப்புகள் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஆய்வாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகவும் பயனுடையன.

செய்திகளும் நிகழ்வுகளும்