நிகமம் வணிக வரலாற்றாய்வுகள்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் ந. அதியமான்
முனைவர் ஆ. துளசேந்திரன்
வெளியீட்டு எண்: 384, 2010, ISBN:978-81-7090-427-4
டெம்மி1/8, பக்கம் 198, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக நீரகழாய்வுத்துறை 2009ஆம் ஆண்டு நடத்திய கருத்தரங்கில் அளிக்கப்பட்ட 22 ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் வணிகம் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பதால் மாங்குளம் என்னும் ஊரின்ல் காணப்பெறும் தமிழ்-பிராமி கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் சங்ககால வணிகக் குழுவின் பெயரான நிகமம் என்னும் தலைப்பில் இந்நூல் வெளியிடப்பெற்றுள்ளது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் பகுப்பாய்வு, தொகுப்பு, விளக்கம், கள ஆய்வு என்று பல நிலைகளில் அமைந்துள்ளன. வணிக வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்தும், ஆய்வுக் களங்கள் குறித்தும் கட்டுரைகள் அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் தமிழக வணிக வரலாற்றாய்வுகளில் விடுபட்டுள்ள சில இடங்களை நிரப்பும்.

செய்திகளும் நிகழ்வுகளும்