மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

நூலாசிரியர்: டாக்டர். உ.வே. சாமிநாதையர்
வெளியீட்டு எண்:45, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 745, உரூ. 120.00, மறுபதிப்பு
நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தம்முடைய தமிழாசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் (1815 – 1876) வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதி முறையே 1933 மற்றும் 1940ஆம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார். இவை இரண்டும் இணைந்த தொகுப்பான இந்நூலின் மறுபதிப்பு இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

டாக்டர் உ.வே.சா அவர்கள் தம் ஆசிரியரிடத்தில் பாடங்கேட்கப் போகும் முன் நிகழ்ந்த வரலாறுகள் (1815–1870 வரையில் உள்ளவை) முதற்பாகத்திலும், ஏனையவை (1870-1876 வரையில் உள்ளவை) இரண்டாம் பாகத்திலும் எழுதப்பட்டுள்ளன.

இப்பதிப்பில் இணைப்பாக, வேறு சில வரலாறுகள், தனிச் செய்யுட்கள், பிறர் கடிதங்கள், பாராட்டுகள், செய்யுள் முதற்குறிப்பகராதி போன்றவை அமைந்துள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்