நூலகம்

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூலகம்

நூல்கள் சேகரிப்புப் பணி

2013ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் முடிய நூல்களின் மொத்தம் எண்ணிக்கை 158929. 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் திசம்பர் வரை சேகரிக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை 3959. இவற்றுள் 2664 தமிழ் நூல்களும் 1010 ஆங்கில நூல்களும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. 206 தமிழ் நூல்களும் 69 ஆங்கில நூல்களும் அன்பளிப்பாகப் பெறப்பட்டனவாகும் . இவை தவிர களஞ்சிய மையத்தில் 4507 நூல்களும் பெருஞ்சொல்லகராதித் திட்டத்தில் 2501 நூல்களும் உள்ளன.

காலமுறை இதழ்கள் சேகரிப்புப் பணி

2013ஆம் ஆண்டு சனவரி முதல் திசம்பர் வரை சேகரிக்கப்பட்ட காலமுறை இதழ்களின் எண்ணிக்கை 269. இவற்றுள் 76 தமிழ் காலமுறை இதழ்களும் 9 ஆங்கில காலமுறை இதழ்களும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. 133 தமிழ் காலமுறை இதழ்களும் 69 ஆங்கில காலமுறை இதழ்களும் அன்பளிப்பாகப் பெறப்பட்டனவாகும் .

காலமுறை இதழ்களின் முன்தொகுதிகள்

நூலகம் தொடங்கிய 1982ஆம் ஆண்டிலிருந்து வாங்கப்பெற்ற தமிழ் நாளேடுகளும், இதழ்களும் ஆய்வுப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. பல அரிய, தொன்மையான காலமுறை இதழ்களின் முன்தொகுதிகள் அறிஞர்களால் வழங்கப் பெற்றிருக்கின்றன.

தனியார் சேகரிப்பு நூல்கள் பகுதி

பின்வரும் பல அறிஞர்கள், தம் வாழ்நாளில் பயன்படுத்திய நூல்கள் வாங்கப்பட்டு ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூலகத்தில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

 • திரு. ஞா. தேவநேயப் பாவாணர்
 • திரு. செயவேலு
 • திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார்
 • பேரா. க.வெள்ளைவாரணனார்
 • திருமதி சுப்புலட்சுமி
 • திரு. எஸ். சுந்தரமூர்த்தி
 • பேரா.டி.வி. மகாலிங்கம்
 • திரு தண்டபாணி தேசிகர்

பின்வரும் அறிஞர்கள் தங்கள் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றனர். நிறுவனங்களும் வழங்கியிருக்கின்றன.

 • பேரா. கு. நம்பி ஆரூரன்
 • திரு. மாதவமேனன்
 • திரு. சாமி. சிதம்பரனார்
 • திரு. சீனிவாச முதலியார்
 • திரு. சந்தானகிருட்டிண முதலியார்
 • திரு. ஆரணி சாரதாம்பாள்
 • திரு. அ.வெ.ரா. கிருட்டிணசாமி ரெட்டியார்
 • பேரா.முனைவர் ச. அகத்தியலிங்கம்
 • கௌமார குருகுலம், மன்னார்குடி

 • திரு. இராமநாதன்
 • சென்னை சகுந்தலா அகாடமி தஞ்சை சுதர்சன சபா

 • பேரா. மு. அருணாசலம்
 • திரு. கனகசுந்தரம் பிள்ளை
 • திரு. எஸ்.வி. சகஸ்ரநாமம்
 • பேரா. முனைவர் ஞானா குலேந்திரன்
 • தாமரைத்திரு த. ஜெயகாந்தன்
 • முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன்
 • கலைமாமணி மாசிலாமணி
 • காரைக்குடி ஏ.ஆர். இராமநாதன்
 • பேரா.முனைவர் சா. கிருட்டினமூர்த்தி
 • சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

 • முனைவர் ஆ. கந்தசாமி, சென்னை

வரையறுக்கப்பட்ட நிலப்படங்கள் பகுதி

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களைப் பற்றி விவரிக்கின்ற வரையறுக்கப்பட்ட நிலப்படங்கள் தமிழக அரசின் ஆணையுடன் பெற்றுப் பராமரிக்கப்படுகின்றன. மேலும் பல நாடுகளின் நிலப்படங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய அலுவலக ஆவணங்கள் – நுண்படத் தொகுப்பு

கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியாவில் ஆட்சி செய்தபோது செய்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், ஆணைகள் கி.பி. 1600லிருந்து 1900 வரை உள்ள ஆவணங்கள் நுண்படங்களாகப் பெறப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சிறுவர் நூலகம்

கோடை விடுமுறைக் காலங்களில் சிறுவர்களுக்குப் பயன்படும் வகையில் அவர்களுக்கு ஏற்ற நூல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

செய்தி சேகரிப்புப் பணி நூல்கள் தேர்வு உதவிப்பணி

ஆய்வாளர்கள் முன்னோடி ஆய்வு தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்ட நூல்கள், கட்டுரைகளைப் பெறுவதற்கு ஏற்பப் பட்டியல்கள் , அறிக்கைகள் ஆய்வாளர்களுக்கு வழங்கி உதவி செய்யப்படுகிறது.

தகவல் தேர்ந்தறிவிப்புப் பணி

பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் தொகுக்கப்பட்டுக் குறிப்பிட்ட ஆய்வாளருக்குத்¢தேவையான தகவல்கள் புதிதாகக் கிடைக்கின்றபோது அவை உரியவர்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன.

ஒலிப்பதிவுப் பணி

பல்வேறு அயல்நாட்டு மொழிகளைஅறிந்து கொள்வதற்கும், வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப்பயணம் செய்வோர் பேசுவதற்கும் ஏற்ற தரவுகள், அடங்கிய ஒலிப்பயிற்சி நாடாக்களும், உடல்நலம் தொடர்பான ஒலிநாடாக்களும் விரும்புவோருக்குத் தேவையான பகுதிகளில் ஒலிப்பதிவு செய்து தரப்படுகின்றது.

படியாக்குப் பணி

ஆய்வாளர்களுக்குத் தேவையான பக்கங்கள் மின்படியாக்கம் செய்து தரப்படுகின்றன.

கணினித் தகவல் மையம்

இந்தியப் பல்கலைக்கழகங்களில் 1857ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழ்நாடு தொடர்பான ஆய்வேடுகளின் தகவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நூலக மென்பொருள் வாங்கப்பட்டு இந்நூலகத்திலுள்ள தமிழ்நூல்கள், ஆங்கில நூல்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியல் கணினிவழித் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

ஒலி, ஒளி விளக்கக் கணினிக் குறுந்தகடுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

விரிவாக்கப் பணி

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்குப் பயனீட்டாளர் நெறியாக்கப் பயிற்சி (User Orientation Programme) அளிக்கப்பட்டுள்ளது.

பனுவல் அரங்கம் என்னும் அரங்கம் ஆய்வு மாணவர்களுக்கும், மற்ற துறையினருக்கும் சிறப்புக் கூட்டங்கள் மற்றும் வகுப்புகள் நடத்துவதற்குப் பயன்பட்டு வருகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்